Responsive image

 

இலங்கை வங்கியுடன் உங்கள் எதிர்காலத்தை கட்டியெழுப்புங்கள்

இலங்கையின் வங்கியியல் துறையில் அதிகளவானோர் தொழில்புரியும் வங்கியாக இலங்கை வங்கி திகழ்கிறது. 9000க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். பன்முகப்படுத்தப்பட்ட மனித மூலதனத்தை இலங்கை வங்கி கொண்டுள்ளதுடன், இருபாலாரும் சம அளவில் காணப்படுகின்றனர். நாட்டின் சகல பாகங்களையும் சேர்ந்த ஊழியர்கள் பணிக்கு இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.

எமது ஊழியர்களின் அறிவு, ஆளுமைகள் மற்றும் குணவியல்புகள் போன்றன வங்கிக்கு சிறந்த வளமாக அமைந்துள்ளதுடன், வங்கியின் தொலைநோக்கு, தன்னேற்புத்திட்டம் மற்றும் இலக்குகளை எய்துவதற்கு ஏதுவான வகையில் வழிகாட்டுவதாக அமைந்திருக்கும். தேசிய அபிவிருத்திக்கு கல்வி, சமூக மற்றும் மனித மூலதன விருத்தி போன்றவற்றினூடாக பங்களிப்பையும் பெற்றுக்கொடுக்கிறது. அதேவேளை இயற்கை வளங்களின் பாதுகாப்பு, சூழல் மற்றும் எமது தேசிய பாரம்பரியம் ஆகியவற்றை பேணும் வகையில் அமைந்துள்ளது.

உயர் ஊக்குவிப்பு மற்றும் சிறந்த உற்பத்தித்திறன் மற்றும் அதிகளவு சுய ஆளுமை கொண்ட ஆளணியை உருவாக்குவதில் எமது மனித வளங்கள் அணி கவனம் செலுத்திய வண்ணமுள்ளது. இதனூடாக கூட்டாண்மை சிறப்புக்கு பங்களிப்பு வழங்குவது எதிர்பார்ப்பாகும். எமது சகல அணி அங்கத்தவர்களுக்கும் வங்கி வாய்ப்பை வழங்குவதுடன், சேவைச்சிறப்பில் சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்தும் ஊழியர்களுக்கு கௌரவிப்பையும் வெகுமதிகளையும் வழங்குகிறது. எமது அணியினருக்கு தொழில்நிலை முன்னேற்றத்திட்டம் குறித்த உறுதி மொழி வழங்கப்படுகிறது. சர்வதேச அனுபவத்தை எமது ஊழியர்களுக்கு பெற்றுக்கொடுப்பதுடன், அவர்களுக்கு தொழில் முன்னேற்றங்களையும் எமது சர்வதேச கிளை வலையமைப்பினூடாகவும், வெளிநாடுகளிலுள்ள முகவர்களினூடாகவும், சர்வதேச பயிற்சிகள் மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சிகளினூடாக வழங்குகிறோம்.

நிபுணத்துவம் வாய்ந்த வங்கியியலாளர்களாக திகழச் செய்வதற்கு எமது அணி அங்கத்தவர்களை நாம் ஊக்குவிப்பதுடன், அவர்களை ஊக்குவிப்பதற்காக பரந்தளவு நலன்புரி வசதிகளும் வழங்கப்படுகின்றன. தொழில் நிலையத்திலும் அதற்கு அப்பாலும் இலங்கை வங்கி அணியினர் கவனத்தில் கொள்ளப்படுகின்றனர். விளையாட்டு, கலை, சமய மற்றும் கலாசார நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு எமது அணியினர் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

ஆர்வமுள்ளவரா?

நீங்கள் அறிவார்ந்த, இலக்குகளை எய்தக்கூடிய ஆர்வமுள்ளவராயின், எமது அணியுடன் நீங்களும் இணைந்து கொண்டு முன்நோக்கிப் பயணிக்கலாம். எம்வசம் பெருமளவு தொழில் வாய்ப்புகள் காணப்படுவதுடன், அரச வங்கி எனும் வகையில் எமது பதவி வெற்றிடங்கள் தொடர்பில் விளம்பரங்கள் பிரசுரிக்கப்படுவதுடன், நாடு முழுவதிலுமிருந்து பதவிக்கு பொருத்தமானவர்கள் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.

எமக்கு பொருத்தமான நபர் நீங்கள் எனக்கருதி நீங்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில், உங்களுக்கு பொருத்தமான நபர் நாம் என்பதை உறுதி செய்வோம்.

 

தொழில் வாய்ப்புகள் – இங்கே அழுத்தவும்