Responsive image

முன்னுரை

இலங்கை வங்கியின் வரலாறு 1939ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் திகதி ஆரம்பமாகியிருந்ததுடன், 1938ம் ஆண்டு இலங்கை வங்கி உரிமைக்கட்டளைசட்ட இல. 53 ன் கீழ், இலங்கையின் ஆளுநர் சேர். அன்ரியு கல்டிகொட் என்பவரால் கொழும்பு, கோட்டை பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.

1988ம் ஆண்டு வங்கியியல் சட்ட இல. 30ன் பிரகாரம் ஸ்தாபிக்கப்பட்டள்ள அங்கீகாரம் பெற்ற வர்த்தக வங்கியாக இலங்கை வங்கி திகழ்கிறது. பதிவு செய்யப்பட்ட அலுவலகம், இல. 1, இலங்கை வங்கி சதுக்கம், இலங்கை வங்கி மாவத்தை, கொழும்பு 1, இலங்கை எனும் முகவரியில் அமைந்துள்ளது.

ஈடுபாடுகளை கொண்டிருப்பது

ஏழு தசாப்த காலத்துக்கும் அதிகமான பயணத்தை பூர்த்தி செய்துள்ள இலங்கை வங்கி, இலங்கையின் முன்னணி நிதிச்சேவைகளை வழங்கும் நிறுவனம் எனும் தனது நிலையை உறுதி செய்துள்ளது. வர்த்தக வங்கியியல், வியாபார நிதி, அபிவிருத்தி நிதி, அடைமானம், குத்தகை, முதலீட்டு வங்கியியல், கூட்டாண்மை நிதியியல், அரசாங்க முறிகளை கையாளல், நகை அடகு, கடன் அட்டை வசதிகள், வெளிநாட்டு வங்கியியல், வெளிநாட்டு நாணய செயற்பாடுகள் மற்றும் இதர நிதிச் சேவைகள் போன்றன வங்கியினால் வழங்கப்படும் பரந்தளவு சேவைகளாக அமைந்துள்ளன. சொத்துக்கள், வைப்புகள் மற்றும் வெளிநாட்டு நாணய பண அனுப்புகைகள் போன்றவற்றில் தனது தலைமைத்துவ நிலையை இலங்கை வங்கி கொண்டுள்ளது.

இலங்கையிலும், வெளிநாடுகளிலும்

தேசத்தின் வங்கியாளரான இலங்கை வங்கி, நாட்டின் சகல மக்களையும் சென்றடையும் வகையில், நாடு முழுவதும் 627 கிளைகளை கொண்டுள்ளது. இவை அனைத்தும் ஒன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. இலங்கை வங்கி ஏரிஎம் வலையமைப்பில் 551 இயந்திரங்கள் காணப்படுகின்றன. 24 மணிநேரமும், 365 நாட்களும், நாட்டின் 25 மாவட்டங்களிலும் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கி வருகின்றன. வங்கி 13 துணை நிறுவனங்களையும், 5 இணை நிறுவனங்களையும் தனது குழுமக் கட்டமைப்பில் கொண்டுள்ளது.

இலங்கை வங்கி, ஐக்கிய இராஜ்ஜியத்தில் அமைந்துள்ள தனது அலுவலகத்தை மேம்படுத்தியிருந்ததன் மூலமாக, தனது முதலாவது வெளிநாட்டு கிளையாக லண்டன் கிளையை செயற்படுத்தி வருகிறது. இந்தக் கிளை இலங்கை வங்கியின் துணை நிறுவனமாக Bank of Ceylon UK Ltd எனும் நாமத்தில் தனது சேவைகளை வழங்குகிறது. வெளிநாடுகளில் மூன்று கிளைகளை கொண்டுள்ள இலங்கை வங்கி, அவை மாலைதீவுகள், சென்னை மற்றும் சீஷெல்ஸ் போன்ற நகரங்களில் அமைந்துள்ளன. மாலைதீவுகளில் 2 ஏரிஎம் இயந்திரங்களும் காணப்படுகின்றன. Seychelles. 2 ATMs are located in Maldives.

இலங்கை வங்கி உயர்ந்த உலகளாவிய வலையமைப்பை கொண்டுள்ளது. 865க்கும் அதிகமான வெளிநாட்டு பங்காண்மை வங்கிகள் மற்றும் நாணயப்பரிமாற்று நிறுவனங்கள் கைகோர்த்துள்ளன. நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வசிப்போருக்கு சேவைகளை பெற்றுக்கொடுக்கும் வகையில், எமது சேவைகளை நாம் கட்டார், ஐக்கிய அரபு இராஜ்ஜியம், குவைட், பஹரெய்ன், ஓமான், சவுதி அரேபியா, இஸ்ரேல், ஜோர்தான், இத்தாலி, தென் கொரியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பரிமாற்று இல்லங்களுடன் பேணி வருகிறோம்.

தரப்படுத்தல்கள் மற்றும் நிரற்படுத்தல்கள்

இலங்கையின் 1ல் வர்த்தக நாமமாக எட்டாவது வருடமாகவும் 41 பில்லியன் ரூபாய் வர்த்தக நாமப் பெறுமதியுடன் 2016ம் ஆண்டு இலங்கை வங்கி தெரிவு செய்யப்பட்டிருந்தது. இந்தத் தெரிவை பிரான்ட் ஃபினான்ஸ் லங்கா மேற்கொண்டிருந்தது. ஃபிட்ச் ரேட்டிங் லங்காவினால், இலங்கை வங்கியின் புறத்தோற்றத்தை நிலையானது என்பதிலிருந்து, நேர்த்தியானது என்பதற்கு தரமுயர்த்தியிருந்தது, அத்துடன், தேசிய நீண்ட கால தரப்படுத்தலான AA+ (lka) என்பதை வழங்கியிருந்தது. இதன் மூலமாக, வங்கியின் மூலதன இருப்பு, இலாபத்தன்மை மற்றும் சொத்துக்களின் தரம் போன்றவற்றின் உறுதியான நிதிக் கோப்பு பிரதிபலிக்கப்பட்டிருந்தது. அத்துடன் ICRA (lk) இனால், AAA தரப்படுத்தல் வழங்கப்பட்டிருந்தது. இதுவே, ICRA லங்காவினால் வழங்கப்பட்ட உயர் கடன் தர தரப்படுத்தலாக அமைந்துள்ளது. 2015ம் ஆண்டின் இலங்கையின் உறுதியான வங்கியாக பெருமைக்குரிய 'த ஏசியன் பாங்கர்' சஞ்சிகையினால் இலங்கை வங்கி தெரிவு செய்யப்பட்டிருந்தது. மேலும், உலகளாவிய ரீதியில் 1000 வங்கிகளில் ஒன்றாக (நாட்டின் தரப்படுத்தல் 1ம் இடம்) பிரித்தானியாவின் 'த பாங்கர் சஞ்சிகை' மூலமாக 2012, 2013, 2014 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் தெரிவு செய்யப்பட்டிருந்தது. தேசிய வர்த்தகச் சிறப்புகள் விருதுகள் 2015 வழங்கும் நிகழ்வில், இலங்கை வங்கிக்கு தங்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்ததுடன், மேலும் ஐந்து 'வெற்றியாளர்| விருதுகளும் வழங்கப்பட்டிருந்தன. இந்தியாவின், மும்பை நகரை தளமாகக் கொண்டுள்ள பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரிகளின் சம்மேளனத்தினால் (CMO Council) ஆசியாவின் மிகச்சிறந்த வர்த்தக நாமங்களில் ஒன்றாக 2013 ம் ஆண்டு விருதை பெற்றிருந்தது.

ஆளுகை

குறிப்பாக அரசாங்கத்தின் உரிமையாண்மையில் இயங்கும் நிறுவனம் என்பதனாலும், இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பை வழங்குவதன் காரணமாகவும், பல்வேறு கொள்கை மற்றும் செயற்படுத்தல்கள் போன்ற செயற்பாடுகளில் தலைமைத்துவம் வகிக்கின்றமை காரணமாகவும், நிறுவனத்தின் மீது பொது நம்பிக்கையை கவர்ந்திழுப்பது மற்றும் தக்கவைத்துக் கொள்ளும் வகையில் இலங்கை வங்கியினால் ஆளுகை தொடர்பில் சிறந்த செயற்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. கூட்டாண்மை ஆளுகை என்பது தொடர்பில் வங்கியினால் சட்டங்கள் மற்றும் ஒழுங்குபடுத்தல்கள் போன்றன பின்பற்றப்பட்டுள்ளதுடன், இவை மேம்படுத்தப்பட்ட செயற்பாட்டு வினைத்திறன் மற்றும் மேம்படுத்தப்பட்ட வர்த்தக நாமம் போன்றவற்றுக்கு அடிப்படையாக அமைந்துள்ளன.

சமூகம்

இலங்கையின் முன்னணி வர்த்தக மற்றும் அரசாங்க வங்கியாக, இலங்கை வங்கியின் மூலமாக சமூகங்களுக்கு குறிப்பிடத்தக்களவு பங்களிப்புகள் வழங்கப்படுகின்றன. இதற்காக நிலைபேறான நிதியிடல், அறப்பணிகள் மற்றும் சமூக முதலீடுகள் போன்றன மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், சகல பங்காளர்களின் அனுகூலத்தை கவனத்தில் கொண்டு ஆரோக்கியமான வியாபாரங்களும் கட்டியெழுப்பப்படுகின்றன.