நிலைபேறாண்மை அறிக்கை

 

பொது முகாமையாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி 

இலங்கை வங்கியின் கூட்டாண்மை தத்துவத்தில் நிலைபேறாண்மை என்பது முக்கிய இடம் வகிக்கிறது. பங்காளர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும், சூழலை பாதுகாக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் வங்கி அதிகளவு கவனம் செலுத்துகிறது. எமது நாட்டில் சமூகத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் வங்கி கவனம் செலுத்துகிறது. வியாபார தத்துவத்தில் நிலைபேறாண்மை தத்துவம் என்பது உள்ளடங்கியுள்ளதுடன், ஏனைய தத்துவங்களுடன் இது ஒன்றிணைந்து பொருளாதார, சூழல் மற்றும் சமூக மட்டத்தில் வியாபாரங்களின் இலாபகரத்தன்மையை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்துவதுடன், எமது சமூகங்களின் தேவைகளை நிவர்த்தி செய்வது பற்றியும் கவனம் செலுத்துகிறது. (நீண்ட கால மற்றும் குறுங்கால அடிப்படையில்)

நிலைபேறான அபிவிருத்தி தொடர்பில் இலங்கை வங்கியின் பங்களிப்பு என்பது மிகவும் உறுதியானதாகும். (உதாரணமாக – பொருளாதாரத்தில் அதன் இடையீட்டு செயற்பாடுகள்) வங்கியின் செயற்பாடுகள் நிலைபேறான வகையில் முன்னெடுக்கப்படுகின்றன. பொருளாதார வளர்ச்சியில் பங்களிப்பு வழங்குவதுடன், நிலைபேறான வகையில் வங்கியின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. சூழலுக்கு பாதகமான தாக்கங்கள் ஏற்படுவதை குறைத்து, சமூகத்தை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது.

கொள்கை அடிப்படையிலான சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகளினூடாக, எமது சமூகங்களுக்கு உதவிகளை வழங்குவது தொடர்பில் வங்கி கவனம் செலுத்தி வருகிறது. இதில் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்திக்கான ”இலங்கை வங்கி மிதுரு நிகழ்ச்சியினூடாக குறைந்தளவு வசதி படைத்த சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வலுவூட்டுவது’ மற்றும் இளைஞர்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவித்து நிலைபேறான சேமிப்புக் கலாசாரத்தை ஊக்குவிக்கும் ”இலங்கை வங்கி ரண் கெகுளு சன்சாத’ (பாடசாலை சேமிப்பு அலகுகள்) – கல்வி நிகழ்ச்சிகளின் கீழான செயற்பாடு. இவற்றுடன் தேசிய கலாசாரத்தை பாதுகாக்கும், வாழ்வாதார அபிவிருத்தி, சூழல் பாதுகாப்பு, அரசாங்கத்தினால் பங்களிப்பு வழங்கப்படும் சமூக அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு உதவுதல், சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் ஊழியர்களின் தன்னார்வ செயற்பாடுகள் போன்றன இலங்கை வங்கியின் வியாபார கொள்கையில் இணைக்கப்பட்டுள்ளன.

நிலைபேறாண்மை தொடர்பில் வங்கி அறிக்கை ஒன்றை வருடாந்தம் வெளியிடுகிறது. இதில் நிலைபேறாண்மை குறித்து பரந்தளவு குறிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதார, சமூக மற்றும் சூழல் ஆகியவற்றுக்கு வங்கி வழங்கும் பங்களிப்பை தெளிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. சர்வதேச  அறிக்கையிடல் செயற்பாடுகள் (GRI) G3 நிலைபேறாண்மை அறிக்கையிடல் வழிகாட்டல் அறிக்கை போன்ற பொருத்தமான சர்வதேச தரங்கள் மற்றும் வழிகாட்டல்கள் ஆகியவற்றை வங்கி பயன்படுத்துகிறது.

Responsive image