Bank of Ceylon

மீன்பிடித்துறை அபிவிருத்திக்கான கடன் திட்டங்கள் – ”தியவர திரிய - II”

 

நோக்கம்

  • மீன்பிடித்துறையை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டின் மொத்த மீன் உற்பத்தியை அதிகரிப்பது
  • இதுவரை கண்டறியப்படாத மீன் வளங்களை நாடிச் செல்ல மீனவர்களை ஊக்குவிப்பது
  • அறுவடைக்கு பின்னர் ஏற்படும் இழப்புகளை குறைத்தல்

தகைமை

  • இலங்கை பிரஜையாக இருத்தல்
  • மீன் பிடித்துறையில் ஈடுபட்டுள்ள நபர், குழுவொன்று அல்லது பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனம்
  • எந்தவொரு நிதி நிறுவனத்திடமிருந்தும் பெற்றுக்கொண்ட சகல கடன்களும் முழுமையாக செலுத்தியிருத்தல்
  • வங்கியால் ஏற்றுக் கொள்ளக்கூடிய வணிக திட்டமொன்றை கொண்டிருத்தல்
  • திட்டத்தை இலாபகரமாக கொண்டு செல்ல அவசியமான அறிவு, அனுபவம் மற்றும் முகாமைத்துவ ஆளுமைகள் ஆகியவற்றை கொண்டிருத்தல்
  • மீன்பிடி மற்றும் கடல் வள திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட மீன்பிடிப்படகு ஒன்றின் உரிமையாளராக இருத்தல் அல்லது செயற்படும் அனுமதிப்பத்திரம் ஒன்றின் உரிமையாளராக இருத்தல்
  • MOFARD, DRAR அல்லது தேசிய கடல்வள அபிவிருத்தி அதிகார சபையின் (NAQDA) பரிந்துரை கடிதத்தை கொண்டிருத்தல்

கடன் தொகை

  • ஆகக்குறைந்தது ரூ.100,000 முதல் ஆகக்கூடியது ரூ. 10 மில்லியன்

வட்டி வீதம்

  • ரூ. 2 மில்லியன் வரை – 6% வருடாந்தம்
  • ரூ. 2 மில்லியனுக்கு அதிகம் – 8% வருடாந்தம்

மீளச்செலுத்தும் காலம்

  • 36 – 60 மாதங்கள் (3 – 6 மாதங்கள் வரை சலுகைக்காலம் அடங்கலாக)

செயற்படும் பிரதேசங்கள்

  • நாடு முழுவதும்

* நிபந்தனைகளுக்கு உட்படும்

(கணக்குக்கு வழங்கப்படும் வசதிகள் தொடர்பான எந்தவொரு நிபந்தனையிலும் மாற்றங்கள், சேர்மானங்கள் அல்லது திருத்தங்கள் மேற்கொள்வதற்கான அதிகாரத்தை இலங்கை வங்கி தன்னகத்தே கொண்டுள்ளது)

மேலதிக விவரங்களுக்கு அருகிலுள்ள இலங்கை வங்கி கிளையின் முகாமையாளரை தொடர்பு கொள்ளவும் அல்லது எமது அழைப்பு நிலையத்துடன் 0112204 444 உடன் தொடர்பு கொள்ளவும்.

 

முகாமையாளர்,

அபிவிருத்தி வங்கியியல் பிரிவு

25ஆம் மாடி, தலைமையகம்,

இலங்கை வங்கி,

இல. 01, இலங்கை வங்கி சதுக்கம், இலங்கை வங்கி மாவத்தை, கொழும்பு 01.

தொ.பேசி:

ஃபக்ஸ்: