Bank of Ceylon

வடக்கின் பொருளாதார செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான விசேட கடன் திட்டம் ”வடக்கின் வசந்தம் – IIம் கட்டம்)

நோக்கம்:

  • வட மாகாணத்தில் பொருளாதார செயற்பாடுகளை மீள ஆரம்பிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் விவசாய, கால்நடை, மீன்பிடி, நுண் மற்றும் சிறியளவு வியாபாரங்கள், வர்த்தகங்கள் மற்றும் இதர சுயதொழில் செயற்திட்டங்களுக்கு கடன் வசதிகளை பெற்றுக் கொடுப்பது.

தகைமை :

  • இலங்கை பிரஜையாக இருத்தல்

  • வட மாகாணத்தில் நிலையாக வசிப்பவராக இருத்தல்

  • மதிப்பிடப்பட்ட செலவீனத்தில், 10%க்கு குறையாத தொகையை உரிமை பங்களிப்பு தொகையாக வழங்கக்கூடியவராக இருத்தல். 

  • வங்கியால் ஏற்றுக் கொள்ளக்கூடிய செயற்திட்ட அறிக்கையை வழங்கக்கூடியவராக இருத்தல் மற்றும் கடனை மீளச்செலுத்தக்கூடிய திறனை கொண்டிருத்தல்.

  • வங்கியால் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஆவணங்களை சமர்ப்பிக்கக்கூடியவராக இருத்தல்.

  • ஏற்கனவே பெற்றுக் கொண்டுள்ள கடன்கள் அனைத்தும் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.

கடன் தொகை :

  • ஆகக்கூடியது ரூ. 200,000

வட்டி வீதம் :

  • 9% வருடாந்த வட்டி

மீளச்செலுத்தும் காலம் :

  • 5 வருடங்கள் வரை (6 மாதங்கள் எனும் மேலதிக செலுத்தும் தவணை அடங்கலாக)

செயற்படும் பிரதேசங்கள் :

  • யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்கள்

* நிபந்தனைகளுக்கு உட்படும்

(கணக்குக்கு வழங்கப்படும் வசதிகள் தொடர்பான எந்தவொரு நிபந்தனையிலும் மாற்றங்கள், சேர்மானங்கள் அல்லது திருத்தங்கள் மேற்கொள்வதற்கான அதிகாரத்தை இலங்கை வங்கி தன்னகத்தே கொண்டுள்ளது)

மேலதிக விவரங்களுக்கு அருகிலுள்ள இலங்கை வங்கி கிளையின் முகாமையாளரை தொடர்பு கொள்ளவும் அல்லது எமது அழைப்பு நிலையத்துடன் 0112204 444 உடன் தொடர்பு கொள்ளவும்.

முகாமையாளர்,

அபிவிருத்தி வங்கியியல் பிரிவு

25ஆம் மாடி, தலைமையகம்,

இலங்கை வங்கி,

இல. 01, இலங்கை வங்கி சதுக்கம், இலங்கை வங்கி மாவத்தை, கொழும்பு 01.

தொ.பேசி: 011 220 5013 / 011 220 5037 / 011220 5003,
ஃபக்ஸ்: 011 2445805