Bank of Ceylon

திறைசேரி தீர்வுகள் மற்றும் சேவைகள்
 

திறைசேரி உண்டியல் மற்றும் திறைசேரி முறிகள்

திறைசேரி உண்டியல் மற்றும் திறைசேரி முறிகள் என்பன அதிகளவு திரளும் gift முனைகளை முதலீடுகளாகும்.

வெளிநாட்டில் பணிபுரிவோருக்கான திறைசேரி உண்டியல்கள் மற்றும் முறிகள்

இலங்கை வங்கியில், பிணைகள் முதலீட்டு கணக்கு (SIA) ஒன்றை வெளிநாட்டில் பணிபுரிவோர் ஆரம்பித்து> இலங்கை அரசாங்கம் / இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள முதலீட்டு மூலதன நிறுவனங்களினால் / அலகு நம்பிக்கை நிதியங்களின் அலகுகளால் வழங்கப்படும் திறைசேரி உண்டியல்கள் / திறைசேரி முறிகளில் முதலீடுகளை மேற்கொள்ளலாம்.

மீள் கொள்வனவு உடன்படிக்கை (Repo)
எனவும் அழைக்கப்படுகிறது. இது பிணைகளை வங்கியினால் விற்பனை செய்யப்படுவதுடன், பின்னொரு நாளில் மீள கொள்வனவு செய்வது தொடர்பில் வங்கியுடன் உடன்படிக்கைக்கு வருவதை குறிக்கும். பாதுகாக்கப்பட்ட கடனுக்கு நிகரானதாக Repo அமைந்திருக்கும். விற்பனையாளரால் மேற்கொள்ளப்படும் செலுத்தத்தவறாமையிலிருந்து கொள்வனவாளரை பாதுகாக்கும் வகையில் பிணைகளை பெறுவார். 5 மில்லியன் ரூபாய்க்கு அதிகமான தொகையைய குறுங்கால மற்றும் மத்தியளவு கால அடிப்படையில் முதலீடு செய்து கொள்ள முடியும்.

மறுபக்க மீள்கொள்வனவு உடன்படிக்கை (Reverse Repo)
உங்கள் திறைசேரி உண்டியல்கள் அல்லது முறிகளுக்கு எதிராக பணத்தை கடனாக பெறல். நிறுவனங்கள், நிதி முகாமையாளர்கள் போன்றவர்களுக்கு உகந்த தீர்வாகும்.

இலங்கை அபிவிருத்தி பிணைகள் (SLDB)
US$ ஆதிக்கத்தைக் கொண்டிருக்கும் இலங்கை அபிவிருத்தி பிணைகளில் அவை வழங்கப்படும் போது அல்லது சந்தையிலிருந்து எம்மூடாக கொள்வனவு செய்வதன் மூலம் நீங்கள் முதலீடு செய்ய முடியும்.

இறையாண்மை முறிகள்
இலங்கை இறையாண்மை முறிகள் 5 அல்லது 10 வருட காலப்பகுதிக்காக இலங்கை அரசாங்கத்தினால் விநியோகிக்கப்படும். இவற்றிலிருந்து பெறப்படும் நிதியைக் கொண்டு அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். இலங்கை சாராத நிறுவனங்களுக்கு மாத்திரம் முதலீடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

திறைசேரி உண்டியல்கள் மற்றும் முறிகள் முதிர்வின் முன்னரான விலைக்கழிவுகள்
திறைசேரி உண்டியல்கள் அல்லது முறிகளில் முதலீடு செய்யப்பட்ட தொகையை முதிர்வடைவதற்கு முன்னதாகவே தற்போது சந்தைப் பெறுமதிகளுக்கமைய மீளப்பெறுவது.

முன்நோக்கிய செலாவணி ஒப்பந்தம்
விசேட வகையான வெளிநாட்டு நாணய கொடுக்கல் வாங்கலாகும். எதிர்காலத்தில் குறித்த காலப்பகுதியில் இரு தரப்பினரிடையே இரு குறிப்பிட்ட நாணயங்களை பரிமாறிக்கொள்வதற்காக இரு தரப்பினரிடையே மேற்கொள்ளப்படும் உடன்படிக்கையாக முன்நோக்கிய செலாவணி ஒப்பந்தம் அமைந்துள்ளது. இந்த ஒப்பந்தங்கள் எப்போதும் நொடிவிலை ஒப்பந்தங்கள் வழங்கப்பட்ட தினத்துக்கு மறுதினம் மேற்கொள்ளப்படும். கொள்வனவாளரை நாணய விலைகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளிலிருந்து பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளது.

வெளிநாட்டு நாணயமாற்று கொடுக்கல் வாங்கல்
பொதுவான வாடிக்கையாளர் கொடுக்கல் வாங்கல்கள், உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் பண அனுப்புகைகள், வெளிநாட்டு நாட்டு நாணயங்களையும் பயணிகள் காசோலையையும் பயணம், கணக்குகளிடையே மாற்றம், வெளி வியாபார கொடுக்கல் வாங்கல்களை தீர்த்தல் போன்றவற்றுக்காக மேற்கொள்ளப்படும்.

கட்டமைக்கப்பட்ட பொருட்கள்
உங்கள் வியாபாரத்தேவைகளுக்கு பொருத்தமான மாற்றியமைத்துக்கொள்ளக்கூடிய பொருட்கள் மற்றும் இடர் கையாளல் சாதனங்கள். இழப்புக்காப்புக்காக சிறந்த கட்டணங்கள் வழங்கப்படுகிறது.

தெரிவுகள்
வெளிநாட்டு நாணயமாற்று இடர்களிலிருந்து உங்கள் இடரைக்காக்கும் வகையிலான இழப்புக்காப்பு சார்பியத்தீர்வு. இதன் மூலமாக ஒப்பந்த கொள்வனவாளருக்கு உரிமையை வழங்கினாலும், கடப்பாட்டை வழங்காது. முன்நோக்கிய செலாவணி ஒப்பந்தத்துக்கு பதிலான மாற்று திட்டமாக அமைந்துள்ளது. ஆனாலும், முன்நோக்கிய செலாவணி ஒப்பந்தத்தில் கொள்வனவாளருக்கு கடப்பாடும் வழங்கப்படும்.