Bank of Ceylon

ஏனைய சேவைகள்

பங்கு வியாபாரத்தில் CDS செலுத்துகை

கொழும்பு பங்குச்சந்தையின் நான்கு மத்திய வைப்புத்திட்ட கட்டமைப்பின் கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் நான்கு (04) வங்கிகளில் ஒன்றாக இலங்கை வங்கி அமைந்துள்ளது. பின்வரும் பங்கு முகவர் நிறுவனங்கள் தமது கொடுப்பனவுகளை இலங்கை வங்கியினூடாக மேற்கொள்கின்றன.

  • லங்கா செக்கியுரிட்டீஸ் (பிரைவட்) லிமிட்டெட்
  • பர்ஸ்ட் கார்டியன் ஈக்குவிட்டீஸ் (பிரைவட்) லிமிட்டெட்

 

காசோலை மற்றும் பற்றுஓலைகளை செலுத்துதல்

மேற்படி வசதிகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொண்டு தமது வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட காசோலைகளை மாற்றிக் கொள்ளலாம். குறிப்பிட்ட கால வரையறைகளின் பிரகாரம் காசோலைகள் மாற்றப்படும்.

 

இலங்கை வங்கியில் துரித கதியில் காசோலை மாற்றம்

ஒன்லைன் ஊடாக இணைக்கப்பட்ட வங்கிகளில் வழங்கப்பட்ட காசோலைகள் 305 ஒன்லைன் வங்கிக்கிளைகளில் வைப்புச் செய்யப்பட்டால், குறித்த தினத்திலே மாற்றப்படும்.

பி.ப. 1.30 மணிக்கு முன்னதாக கொழும்பு மாவட்டத்தினுள் வைப்புச் செய்யப்பட்ட, பிறமாவட்டங்களில் நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் வைப்புச் செய்யப்பட்ட எந்தவொரு வங்கியாலும் வழங்கப்பட்ட காசோலைகள் CITS * காசோலை மாற்றல் கட்டமைப்பின் மூலமாக மற்றைய வேலை நாளில் மாற்றம் செய்யப்படும்.

மேலே குறிப்பிட்டது போல காசோலைகள் மாறாத சந்தர்ப்பங்கள்,

  • பூர்த்தி செய்யப்படாத காசோலை / பூர்த்தி செய்யப்படாத காசோலை வைப்பு படிவம்
  • கணக்குகளில் போதியளவு பணம் இன்மை
  • குறித்த நேரத்திற்கு பின்னர் வைப்புச் செய்யப்பட்டால்
  • கொடுப்பனவு செய்யும் வங்கி மேலதிக நேரத்தை கோரியிருந்தால்
  • தொழில்நுட்ப அல்லது இயற்கை இடையூறுகள்

 

(வெளிநாட்டு காசோலைகள் மற்றும் வெளிநாட்டு பற்று ஓலைகள் இந்த ஏற்பாட்டின் கீழ் உள்வாங்கப்படமாட்டாது)

மேலே குறிப்பிட்ட காலப்பகுதியினுள் உங்கள் காசோலை மாறாவிடின், அருகிலுள்ள இலங்கை வங்கிக் கிளையை நாடவும்.

 

CITS – Cheque Imaging and Truncation கட்டமைப்பு லங்காகிளியர் (பிரைவட்லிமிட்டெட்டினால் செயற்படுத்தப்படுகிறது.

 

காசோலைகளை பணமாக்கல்

அங்கீகாரம் பெற்ற நபருக்கு காசோலை ஒன்றை வழங்கி அதை வங்கி கிளையில் சமர்ப்பித்து கொடுப்பனவை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தலாம். குறித்த கொடுப்பனவை நபரின் இனங்காணலை மேற்கொண்ட பின்னர் மேற்கொள்ளுமாறு வங்கிக்கு அறிவுறுத்தலாம்.

 

பாரிய நிறுவனங்களுக்கு பண சேகரிப்பு மற்றும் பணக் கொண்டு செல்கை வசதிகள்

உங்கள் வாசலுக்கு வந்து பணத்தை சேகரித்து செல்வதன் மூலம் உங்களுக்கு பாரிய தொகையை கொண்டு செல்லும் இடரை முகங்கொடுக்க நேரிடாது. குறித்த தினத்தில் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.

 

BoC  i-net வசதி

வாடிக்கையாளர்களுக்கு இணையத்தினூடாக நடைமுறைக் கணக்கு செயற்பாடுகளை பார்வையிடலாம்.

 

நிதி முகாமைத்துவம்

நடைமுறை கணக்கில் காணப்படும் மேலதிக நிதியை விசேட அழைப்பு வைப்பு கணக்குகளில் தினசரி அடிப்படையில் வைப்புச் செய்வதற்கான வசதியை வங்கி வழங்கும், இதன் மூலம் மேலதிக பணத்தைக் கொண்டு உங்களால் வருமானமீட்ட முடியும்.