Bank of Ceylon
Responsive image

வதியாதோர் வெளிநாட்டு நாணயக்கணக்கு (NRFC)

நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை ஆகக்கூடிய அனுகூலங்களை பெற்றுக் கொள்ளும் வகையில் NRFC சேமிப்புக் கணக்கில் சேமியுங்கள்


கணக்கொன்றை ஆரம்பிப்பதற்கான தகைமை   

  • செல்லுபடியாகும் பணியாற்றும் விசா உடன் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகள்

  • வெளிநாட்டில் செல்லுபடியாகும் பணியாற்றும் விசாவுடன் பணியாற்றிய இலங்கையர்கள் நாட்டுக்கு திரும்பி 90 நாட்களுக்குள்.

  • தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு செல்லவுள்ள இலங்கையர்கள், வெளிநாட்டுக்கு பயணிக்கும் முன்னதாக தமது கடவுச்சீட்டு, செல்லுபடியாகும் வீசா மற்றும் தொழில் ஒப்பந்தம் ஆகியவற்றை காண்பித்து NRFC கணக்கொன்றை ஆரம்பிக்கலாம்.

  • வெளிநாட்டு உரிமையைப்பெற்று வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள்.

  • Migrant Blocked கணக்குகளை (MBA) கணக்குகளை ஆரம்பித்துள்ள குடிபெயர்ந்தோர்.

  • பிரிதொரு வங்கியில்/கிளையில் எந்தவொரு நாணயத்திலும் NRFC கணக்கை பேணும் ஒருவர் குறித்த கணக்கிலிருந்து பணத்தை மாற்றி மற்றுமொரு NRFC கணக்கை ஆரம்பிக்க முடியும்.

  • 18 வயதை பூர்த்தி செய்ததும், NRFC சிறுவர் கணக்குகளை (ரண் கெகுளு NRFC) சாதாரண NRFC கணக்காக மாற்றிக் கொள்ள முடியும்.

    பணத்தை இலங்கைக்கு அடிக்கடி அனுப்ப எதிர்பார்ப்போருக்கு, புதிய கணக்குகளை ஆரம்ப வைப்புகள் எதுவுமின்றி ஆரம்பித்துக்கொள்ளலாம். *

உங்களுக்கு வழங்கும் வசதிகள்,

  • உங்கள் முதலீட்டுக்கு 100% பாதுகாப்பு

  • கணக்குகளை ஆரம்பிக்க முடியும் என்பதுடன் பணத்தை வைப்புச் செய்யவும் முடியும்.

அமெரிக்க டொலர் USD யூரோ EUR
அவுஸ்திரேலிய டொலர் AUD ஜப்பானிய யென் JPY
சிங்கப்பூர் டொலர் SGD ஸ்ரேளிங் பவுண் GBP
கனேடிய டொலர் CAD சீன ரென்மின்பி CNY
நியுசிலாந்து டொலர் NZD சுவிஸ் ஃபிராங்க் CHF

  • கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள்.

  • NRFC கணக்கில் சேகரிக்கப்படும் வட்டி வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்படும் என்பதுடன், நீங்கள் பேணும் வெளிநாட்டு நாணயத்தில் வட்டித்தொகை கணக்கில் வைப்புச் செய்யப்படும்.

  • விபத்துகளுக்கான இலவச ஆயுள் காப்புறுதி 1.0 மில்லியன் ரூபாய் வரை*

  • வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது பயணப்பொதிகள் காணாமல் போனால், 50000 ரூபாய் வரை காப்புறுதி*

  • சுயதொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது ரூ. 300000 வரை கடன் வசதி

  • ரூ. 300000 வரை “BOCசரணி” வீடமைப்புக்கடன் 5% வட்டியில்.

  • பண மீளப்பெறுகைகள் மற்றும் வெளிநாட்டு நாணயத்தை அனுப்புகையில் பெற்றுக் கொள்ளும் பகுதியில் எவ்வித தரகுக்கட்டணங்களும் அறவிடப்படமாட்டாது.

  • பணம் மற்றும் பொருட்களை உலகில் எப்பகுதியிலும் கொள்வனவு செய்வதற்கு உதவும் வகையில் டெபிட் கார்ட்கள்.

  • இலங்கைக்கு திரும்பிய பின்னரும் இந்த கணக்கை நீங்கள் பேண முடியும்.

  • இலங்கை ரூபாய்க்கு மாற்றும் போது உயர் நாணயமாற்று விகிதங்கள்.

  • இலங்கையின் மாபெரும் ஒன்லைன் வங்கி வலையமைப்புடன் இணைய வங்கிச் சேவை வசதிகள்.

    *(நிபந்தனைகளுக்கு உட்படும்)

தேவைப்படும் ஆவணங்கள்

  • நபரின் கடவுச்சீட்டில் நிழற்படம் மற்றும் பிரத்தியேக விவரங்கள் காணப்படும் பக்கத்தின் போட்டோபிரதி.

  • செல்லுபடியாகும் தொழில் அனுமதி வீசாவின் போட்டோபிரதி.

  • முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்.

  • இலங்கையர் அல்லாத பட்சத்தில், குறித்த நபரின் இலங்கையுடன் தொடர்பை உறுதி செய்வதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.