Bank of Ceylon
Responsive image

சென்னை கிளை

  • உயர் வட்டி

  • அரச வங்கி எனும் அடிப்படையில் 100% பாதுகாப்பு

  • வாடிக்கையாளர் சேவையில் சர்வதேச தரம்


நிபுணத்துவ மற்றும் நட்புறவான சேவை

  • வரைவு காசோலை வைப்புகள்வை

  • ப்புக் கணக்குகள்


தகைமை:
 

இந்திய பிரஜைகள்
தொழில்/வியாபாரம் அல்லது பணி காரணமாக வெளிநாடொன்றில் வதியும் இந்திய குடிமகன்
 
வெளிநாட்டு பிரஜைகள்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வதியாதோர் வெளிநாட்டு பிரஜைகளும், வதியாதோர் இந்திய பிரஜைகளைப் போன்று கருதப்படுவார்கள்


வைப்புக் கணக்கு வகைகள்

NRE சேமிப்பு வங்கிக் கணக்குகள்

இந்த வகை கணக்குகளில் பண அனுப்புகைகள் வெளிநாட்டு நாணயங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்திய நாணயத்துக்கு மாற்றப்பட்டு கணக்கில் பேணப்படும். கணக்கை பேணுவதற்கு வாடிக்கையாளர்களுக்கு இந்த காசோலை புத்தகம் வழங்கப்படும். இந்திய ரிசர்வ் வங்கியினால் அறிவிக்கப்படும் வட்டி வீதங்கள் இந்த கணக்குக்கு வழங்கப்படும். இந்த கணக்கிலிருந்து மற்றொரு NRE கணக்குக்கு பணமாற்றல்கள் அனுமதிக்கப்படும். இந்த கணக்கில் பேணப்படும் மீதியை தமது வசிக்கும் நாட்டுக்கு மாற்றிக் கொள்ளலாம்.

 

NRE தவணை வைப்புகள்

அனுப்பப்படும் பணம் என்பது வெளிநாட்டு நாணயத்தில் அனுப்பி வைக்கப்படும் என்பதுடன், நிலையான வைப்புக் கணக்காகும். இந்திய ரூபாய்க்கு மாற்றப்பட்டு, ஆகக்குறைந்தது ஒரு வருடத்துக்கு அல்லது அதற்கு மேற்பட்ட காலத்துக்கு பேணப்படும்.

வட்டி மற்றும் முதல் தொகை ஆகியவற்றை தாம் வசிக்கும் நாட்டுக்கு முதிர்வின் பின்னர் பெற்றுக் கொள்ளலாம். அல்லது மேலும் காலப்பகுதிக்கு புதுப்பித்துக் கொள்ளலாம். இந்திய ரிசர்வ் வங்கியினால் அறிவிக்கப்படும் வட்டி வீதங்கள் அமுலில் இருக்கும். வரிகள் அறவிடப்படமாட்டாது. காலாண்டு அடிப்படையில் வட்டி சேர்க்கப்படும் என்பதுடன், ஆகக்குறைந்த வைப்பாக 1000 அமெரிக்க டொலர்கள் அல்லது அதற்கு நிகரான தொகை மேற்கொள்ளப்பட வேண்டும்.


(NRO) வதியாதோர் சாதாரண / சேமிப்பு / நிலையான வைப்புகள்

வதியாதோர் இந்தியர்களால் சேமிப்பு வங்கி NRO கணக்கு மற்றும் நிலையான வைப்பு NRO கணக்கு ஆகியவற்றை ஆரம்பிக்க முடியும். ஏனைய கணக்குகளை போலல்லாமல், இந்திய நாணயத்திலும் பண அனுப்பல்களை மேற்கொள்ளலாம். ஆனாலும் கணக்கு மீதியை வெளிநாடுகளுக்கு மாற்றிக் கொள்ள முடியாது. வைப்புக்காலப்பகுதிக்கமைய கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள் வழங்கப்படும். திரட்டப்படும் வட்டி என்பது இந்திய வருமான வரிக்கமைய தீர்மானிக்கப்படும். வெளிநாட்டுப் பிரஜைகளும் எமது NRO கணக்கை ஆரம்பிக்க முடியும். NRO SB கணக்குக்கு 3.5% வட்டி வழங்கப்படுகிறது.


வெளிநாட்டு நாணய வதியாதோர் கணக்குகள்

இது தவணை வைப்புத்திட்டமாகும், வெளிநாட்டு நாணயத்தில் பண அனுப்பல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். பின்வரும் நான்கு நாணயங்களில் மட்டுமே ஒரு வருட காலப்பகுதிக்கு கணக்கு பேணப்படும்.


நாணயங்கள்:

  • அமெரிக்க டொலர் (USD)

  • ஸ்ரேளிங் பவுண்கள் (GBP)

  • யூரோ (EUR)

  • ஜப்பானிய யென் (JPY)


அனுகூலங்கள்:

  • ஆகக்குறைந்த வைப்பு 1000 அமெரிக்க டொலர் அல்லது அதற்கு நிகரான ஏனைய நாணயங்கள்.

  • வைப்புக் காலப்பகுதிக்கமைய, கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள் வழங்கப்படும்.

  • வைப்புத்தொகை மற்றும் வட்டியை வெளிநாட்டுக்கு மாற்றிக் கொள்ளலாம்.

  • விசேட கட்டணத்தில் போதியளவு இடவசதிகளுடன் லொக்கர்கள் வழங்கப்படும்.


பரவற்சுருக்கமில்லா கணக்கு:


இந்த கணக்கில், வாடிக்கையாளர் ஆகக்குறைந்த மீதியாக ரூ.10 ஐ பேண வேண்டும். வாடிக்கையாளருக்கு கணக்குப்புத்தகம் வழங்கப்படுவதுடன், காசோலைப்புத்தகம் வழங்கப்படாது.

எம்மால் வழங்கப்படும் ஏனைய வசதிகள்,

  • வியாபார நிதி வசதிகள்க

  • டன் வசதிகள்பா

  • துகாப்பு லொக்கர் வசதிகள்தி

  • றைசேரி மற்றும் நிதிச் சந்தை செயற்பாடுகள்பி

  • ரதிநிதி வங்கிச்சேவை

 

நாட்டுக்கான முகாமையாளர்
திரு.டபிள்யு.என்.பி.சுரவிமல
தொ.பேசி.

நேரடி:      + 91 44 39513313
பொது   + 91 44 39519999

ஃபக்ஸ்
+91444204260
   
பதில் முகாமையாளர் திரு. அஜித் சமரகோன்
தொ.பேசி. +91 44 39519901
மின்னஞ்சல் ceybank@vsnl.com