Bank of Ceylon

BOC வீட்டு கடன் திட்டம்

எமது வாடிக்கையாளர்களின் சகல வீட்டு தேவைகளையும் நிவர்த்தி செய்யும் வகையில் வீட்டுக் கடன் வசதிகளை வழங்கும் இலங்கை வங்கி.

தகைமை:

  • BOC வாடிக்கையாளர்கள், 18 – 60 வயதுக்கு இடைப்பட்ட இலங்கை பிரஜைகள் ஏற்புடைய மீளச் செலுத்தும் திறனை கொண்டிருப்பதுடன் தெளிவான DRU மற்றும் CRIB பதிவுகளை பேணியிருத்தல்.
  • வரையறுக்கப்பட்ட பொறுப்புடைய நிறுவனங்கள் (விற்பனைக்காக வீடுகளை நிர்மாணிப்போர்)

கடன் தொகை:

  • வாடிக்கையாளரின் மீளச் செலுத்தும் தகைமையை பொறுத்து

மீளச் செலுத்தல்:

  • ஒரு வருட சலுகைக்காலத்துடன் ஆகக்கூடியது 25 வருடங்கள் வரை சமப்படுத்தப்பட்ட தவணை கொடுப்பனவுகள்
  • ஆகக்கூடிய வயது 65 வருடங்கள் அல்லது ஓய்வூதியம் இதில் ஏதாவது முதல் ஏற்படும் சந்தர்ப்பம்
  • சலுகைக்காலம் ஆகக்கூடியது 3 இடைவேளைகளுடன் 5 வருடங்கள் வரை.

பிணை : 

  • குறித்த சொத்தின் அடைமானம்

 

'ஹெவ்லொக் சிட்டி வீடமைப்புத் திட்டம்' கொள்வனவாளர்கள்

ஹவ்லொக் சிட்டி வீடமைப்புத் திட்டத்தில் தொடர்மனை குடியிருப்பு ஒன்றை கொள்வனவு செய்ய எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த விசேட வீடமைப்புக் கடனை வழங்க இலங்கை வங்கி முன்வந்துள்ளது.

தகைமை:

  • இலங்கை வங்கி வாடிக்கையாளர்கள், 18 – 60 வயதுக்குட்பட்ட இலங்கை பிரஜைகள் ஏற்புடைய மீளச் செலுத்தக்கூடிய திறனை கொண்டிருப்பதுடன் தெளிவான DRU மற்றும் CRIB பதிவுகளை பேணியிருத்தல்.

கடன் வசதியின் அளவு :

  • ஆகக்கூடியது ரூ. 40 மில்லியன் அல்லது கொள்முதல் விலையின் 75வீதம்

 

பல்கலைக்கழக ஊழியர்கள்

1978 ஆம் ஆண்டின் 16 இல. இலங்கை பல்கலைக்கழகங்கள் சட்ட மூலத்தின் பிரகாரம் பதிவு செய்யப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஆகக்குறைந்தது 5 வருட காலம் நிரந்தர நிலை மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட சேவையிலுள்ள அதிகாரிகளுக்கு விசேட வீடமைப்பு கடன் திட்டத்தை வழங்க இலங்கை வங்கி முன்வந்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் சேவையிலுள்ள காலப்பகுதியில் ஒரு தடவை மட்டுமே கடன் வழங்கப்படும்.

பெற்றுக் கொள்ளக்கூடிய கடன் தொகை :

  • கல்விசார் ஊழியர்கள்:  2.0 மில்.
  • கல்விசாரா ஊழியர்கள்:  1.0 மில்.

நிபந்தனைகளுக்கு உட்படும்

(வழங்கப்படும் கடன் வசதிகள் தொடர்பான எந்தவொரு நிபந்தனையிலும் மாற்றங்கள், சேர்க்கைகள் அல்லது மீளமைப்புகள் மேற்கொள்வதற்கான அதிகாரத்தை இலங்கை வங்கி தன்னகத்தே கொண்டுள்ளது)

மேலதிக விவரங்களுக்கு, அருகிலுள்ள இலங்கை வங்கி கிளையின் முகாமையாளரை தொடர்பு கொள்ளவும் அல்லது எமது அழைப்பு நிலையத்துடன் 0112204 4444 உடன் தொடர்பு கொள்ளவும்.

முகாமையாளர்,
நுகர்வோர் கடன் பிரிவு,
20ஆம் மாடி, தலைமையகம்,
இலங்கை வங்கி,
இல. 01, இலங்கை வங்கி சதுக்கம், இலங்கை வங்கி மாவத்தை, கொழும்பு 01.
தொ.பேசி : 011 220 4522 / 011 220 4563 / 011220 4558,
மின்னஞ்சல் : 011 2338762