Bank of Ceylon
Responsive image

கடன் அட்டைகள்
 

தற்போது மைக்குரோ சிப் உடன் அதிகளவு பாதுகாப்பானது
  • புதிய டிஜிட்டல் முறையிலமைந்த மைக்குரோ சிப் இது வழமையான காந்தப்புல பட்டியைக் கொண்ட அட்டையை விட வாடிக்கையாளருக்கு அதிக பாதுகாப்பை வழங்குவதுடன், பயன்பாட்டின் போது வாடிக்கையாளரின் தகவல்களை இரகசியமாக பிரதி எடுக்க முடியாது.
  • இந்த சிறந்த பாதுகாப்பான உள்ளம்சம் தற்போது BOC கடன் அட்டையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
  • விற்பனை நிலையங்களும் வாடிக்கையாளர்களுக்கு இந்த உயர்ந்த பாதுகாப்பான சேவையை வழங்குவதற்கு, BOC சிப் செயற்படுத்தப்பட்ட POS இயந்திரங்களுக்கு மாறலாம்.
                                        2544300 அல்லது 2544301 அல்லது 2393931 உடன் அழைப்பை ஏற்படுத்தி BOC கடன் அட்டையுடன் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்


விண்ணப்பப்படிவம் தரவிறக்கம்   -  விண்ணப்பப்படிவம் தரவிறக்கம்

தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும் - Visa Electron Debit Card Application

பார்வையிட இங்கே அழுத்தவும் TARIFF details

தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும் - Monthly Statement

தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும் - CREDIT CARD interest calculation document

தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும் - Rights, Obligations and Liabilities of Supplementary Cardholder

தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும் - Terms and conditions of governing the useof BOC Credit cards

 

1. BOC கடன் அட்டை

பொருட்களை கொள்வனவு செய்யும் போதும், சேவைகளை பெறும் போதும் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு மிகவும் சுலபமான முறையாக BOC கடன் அட்டை அமைந்துள்ளது.

கடைகள் அல்லது ஒன்லைனில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு கொடுப்பனவுகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் பல்வேறு கடன் அட்டைத் தெரிவுகளை BOC வழங்குகிறது. ATMகளிலிருந்து பணத்தை மீளப் பெறுவதற்கும் கடன் அட்டைகளை நீங்கள் பயன்படுத்தலாம். சர்வதேச வர்த்தக நாமமான 'VISA' கடன் அட்டையை அறிமுகம் செய்த முன்னோடி எனும் பெருமையை இலங்கை வங்கி தன்னகத்தே கொண்டுள்ளது. BOC கார்ட் சென்டரின் 25ஆவது வருட பூர்த்தியை நாம் தற்போது கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். BOC கடன் அட்டைகள் மைக்குரோ சிப்கள் மூலமாக அதிகளவு பாதுகாப்பைக் கொண்டுள்ளன. டிஜிட்டல் முறையிலமைந்த மைக்குரோ சிப் வகையாகும். சாதாரண காந்தப்புல பட்டியை விட அதிகளவு பாதுகாப்பானதாக அமைந்துள்ளது. கொடுக்கல் வாங்கலை மேற்கொள்ளும் போது உங்கள் தரவுகள் இரகசியமான முறையில் திரட்டப்படுவதை தவிர்க்கும் வகையில் புதிய சிப் முறை அமைந்துள்ளது. இந்த விசேட அம்சம் தற்போது BOC கடன் அட்டைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன. விற்பனை நிலையங்களும் வாடிக்கையாளர்களுக்கு இந்த உயர்ந்த பாதுகாப்பான சேவையை வழங்குவதற்கு, BOC சிப் செயற்படுத்தப்பட்ட POS இயந்திரங்களுக்கு மாறலாம்.

1.1 கார்ட் வகைகள்

  • VISA
    • பிளாட்டினம்

    • இன்டர்நஷனல் கோல்ட்

    • இன்டர்நஷனல் கிளாசிக்
  • மாஸ்டர்
    • டைடேனியம்
  • ஏனைய
    • ஃபிளெக்ஸி

1.2 யாருக்காக

  • 18 வயதை பூர்த்தி செய்தவர்களுக்கு

  • ஆகக்குறைந்தது மாதாந்த வருமானம் ரூ.15000 பெறுவோருக்கு
2.1 வழமையான வருமானமீட்டுவோர்
  • முறையாக பூர்த்தி செய்த விண்ணப்பப்படிவம்
  • தேசிய அடையாள அட்டை/செல்லுபடியாகும் கடவுச்சீட்டு/வாகன சாரதி அனுமதிப்பத்திரம்
  • சம்பளம் / வருமானத்தை உறுதி செய்யும் ஆவணம்
  • வதிவிட முகவரியை உறுதி செய்ய கட்டணப்பட்டியல்

2.2 சுய தொழில் புரிவோர்
  • முறையாக பூர்த்தி செய்த விண்ணப்பப்படிவம்
  • தேசிய அடையாள அட்டை/செல்லுபடியாகும் கடவுச்சீட்டு/வாகன சாரதி அனுமதிப்பத்திரம்
  • வியாபாரப் பதிவின் பிரதி
  • வரி பற்றுச்சீட்டுகள் (இருப்பின்)
  • வதிவிட முகவரியை உறுதி செய்ய கட்டணப்பட்டியல்

2.3 நிறுவனத்தின் அனுசரணையை பெறும் ஊழியர்கள்

தொழில் வழங்குநரிடமிருந்து,

  • முறையாக பூர்த்தி செய்த விண்ணப்பப்படிவம்
  • தேசிய அடையாள அட்டை/செல்லுபடியாகும் கடவுச்சீட்டு/வாகன சாரதி அனுமதிப்பத்திரம்
  • வியாபாரப் பதிவின் பிரதி
  • வரி பற்றுச்சீட்டுகள் (இருப்பின்)
  • வதிவிட முகவரியை உறுதி செய்ய கட்டணப்பட்டியல்

ஊழியரிடமிருந்து

  • முறையாக பூர்த்தி செய்த விண்ணப்பப்படிவம்
  • தேசிய அடையாள அட்டை/செல்லுபடியாகும் கடவுச்சீட்டு/வாகன சாரதி அனுமதிப்பத்திரம் (குறிப்பு: ஆவணங்கள் நிறுவன செயலாளரினால் உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்)
3.1 வட்டியில்லாத கடன் செலுத்தும் காலப்பகுதி
  • வட்டியில்லாத கடன் செலுத்தும் காலப்பகுதியாக குறைந்தது 22 நாட்கள் முதல் ஆகக்கூடியது 52 நாட்களை வரை நீங்கள் அனுபவிக்க முடியும்.
3.2 பருவகால விலைக்கழிவுகள் மற்றும் சலுகைகள் 3.3 வெகுமதி திட்டங்கள்
  • கார்ட் வைத்திருப்பவர் செலவிடும் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கும் 1 ரிவோட் புள்ளியை பெறுவார். இவ்வாறு சேகரிக்கப்படும் ரிவோட் புள்ளிகள் 3:1 எனும் விகித அடிப்படையில் ரூபாய்க்கு மாற்றப்பட்டு, கடன் அட்டை கணக்கில் ஒவ்வொரு காலாண்டிலும் சேர்க்கப்படும்.
3.4 காப்புறுதி காப்பீடு
ஆயுள் காப்புறுதி காப்பீடு/நிலையான அங்கவீன காப்பீடு இன்டர்நஷனல் கிளாசிக் கார்ட்டுக்கு - ரூ. 50,000 வரை
இன்டர்நஷனல் கோல்ட் கார்ட்டுக்கு - ரூ. 100,000 வரை
டைடேனியம் கார்ட்டுக்கு - ரூ. 100,000 வரை
பிளாட்டினம் கார்ட்டுக்கு - ரூ. 100,000 வரை
பயண காப்புறுதி பிளாட்டினம் கார்ட்டுக்கு
பிரத்தியேக விபத்துக் காப்பீடு – அமெ.டொ. 250,000 வரை
மருத்துவ காப்பீடு – அமெ.டொ. 100,000 வரை
பற்களுக்கான செலவீனம் - அமெ.டொ. 250 வரை
உயிரிழந்த சடலத்தை தாயகத்துக்கு திரும்ப அனுப்ப – அமெ.டொ. 6000 வரை
பைகள் காணாமல் போதல் - அமெ.டொ. 1000 வரை
கடவுச்சீட்டு காணாமல் போதல் - அமெ.டொ. 250 வரை
3.5 அவசர நிலைகளின் போது கடன் எல்லையை அதிகரித்துக் கொள்ளல்.
  • உதாரணம்: வைத்தியசாலை அனுமதி
3.6 அவசர நிலைகளின் போது 50% பண மீளப்பெறல்கள்
  • பணமீளப்பெறுகைகள் ATMகளில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், மொத்த பண மீளப்பெறுகை என்பது வழங்கப்பட்டுள்ள கடன் எல்லைப் பெறுமதியின் 50 வீதத்தை விட அதிகரிக்கக்கூடாது.
3.7 குறைந்த எல்லைப்பெறுமதிகள் கொண்ட துணை கார்ட்கள்
  • பின்வரும் தேவைகளுக்காக மேலதிக அட்டை ஒன்றை குறைந்த எல்லைப்பெறுமதியில் பெற்றுக் கொள்ளலாம்.

    • ஒன்லைன் கொள்வனவுகள்

    • அன்புக்குரியவர்களுக்கு
3.8 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை நிலையம் எமது அழைப்பு நிலையத்தினூடாக (011-2204444)

3.9 இலகு செலுத்துகை திட்டம்

  • கொள்வனவு செய்த பொருட்கள்/சேவைகள் ஆகியவற்றுக்கான மொத்தப் பெறுமதியை இலகுவான சம தவணைக் கட்டணங்களில் செலுத்தக்கூடிய வசதியை இந்த திட்டம் வழங்குகிறது.
கொடுப்பனவுகள் மேற்கொள்ளக்கூடிய வழிமுறைகளில்,

 

  • இணைய வங்கிச்சேவை
  • மொபைல் வங்கிச்சேவை – Paymate
  • ATM இயந்திரங்கள்
  • உங்கள் BOC நடைமுறை அல்லது சேமிப்பு கணக்கிலிருந்து நிலையியல் கட்டளை வழங்குதல்
  • நாடு முழுவதும் பரந்துள்ள BOC கிளை வலையமைப்பு

மொத்த நிலுவைத் தொகையில் 5 சதவீதத்தை செலுத்தி, அட்டையை சாதாரண நிலையில் பேணலாம்.

அதனைத் தொடர்ந்து உங்கள் கடன் அட்டையின் நிலுவையை முழுமையாக அல்லது பகுதியாக செலுத்தலாம். ஆனாலும் மொத்த நிலுவைத் தொகைக்கு 5 சதவீதத்தை விட குறைந்த தொகையை மேற்கொள்ள வேண்டாம். மொத்த நிலுவைத் தொகையில் 5 சதவீதத்தை கட்டணம் செலுத்துவதற்கான இறுதித் திகதிக்கு முன்னர் செலுத்தத் தவறும் பட்சத்தில், தண்டப்பணமாக ரூ.750 அறவிடப்படும். எஞ்சியிருக்கும் தொகை நடைமுறையிலுள்ள வட்டி வீதத்துக்கமைய வட்டி அறவிடப்படும். கட்டணம் செலுத்துவதற்கான இறுதி திகதியிலிருந்து 30 தினங்களுக்குள் நீங்கள் கொடுப்பனவை மேற்கொள்ளத் தவறினால், அட்டை தடை செய்யப்படும் என்பதுடன், அதனை பயன்படுத்த முடியாது. 90 நாட்களின் பின்னர், கார்ட் உரிமையாளர் கட்டணம் செலுத்த தவறிய கடனாளியாக CRIB க்கு அறிவிக்கப்படுவார்.
ஒன்லைன் ஷொப்பிங் மற்றும் மேலும் பல கொடுப்பனவு முறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, உங்கள் கடன் அட்டையின் தகவல்களை பாதுகாத்துக் கொள்வது முன்னரை விட மிகவும் கட்டாயமானதாக அமைந்துள்ளது. இதற்கமைய, கடன் அட்டையில் மோசடிகள் இடம்பெறுவதை தவிர்த்துக் கொள்ளும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், தமது கடன் அட்டைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு எப்போதும் கடன் அட்டை உரிமையாளர்களைச் சேரும். உங்கள் கடன் அட்டைகளை பாதுகாத்துக் கொள்வதற்கு செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை அடங்கிய முக்கிய விவரங்கள் வருமாறு,

5.1 செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை

செய்ய வேண்டியவை
  • அட்டையின் பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ள இடத்தில் உங்கள் கையொப்பத்தை இடவும்.
  • உங்கள் அட்டை இலக்கத்தை இரகசியமாக பேணவும்.
  • நீங்கள் கொள்வனவை மேற்கொள்ளும் போது கொடுக்கல் வாங்கல் எப்போதும் உங்கள் முன்னிலையில் இடம்பெறுவதை உறுதி செய்யுங்கள்.
  • காசாளரினால் உங்கள் கடனட்டை உங்களிடம் திருப்பி வழங்கப்படும் போது, அது உங்களுடையது தானா என்பதை உறுதி செய்து கொள்வதுடன், அதில் ஏதேனும் சேதங்கள் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  • பற்றுச்சீட்டுக்களை பேணவும், அதன் மூலம் அவற்றை மாதாந்த அறிக்கையுடன் பரிசோதித்துக் கொள்ள முடியும்.
  • உங்கள் மாதாந்த அறிக்கையில் சந்தேகத்திற்கிடமான கொடுக்கல் வாங்கல்கள் பதிவாகியிருந்தால் அல்லது நீங்கள் மேற்கொள்ளாத கொடுப்பனவு ஒன்றுக்காக SMS ஒன்று கிடைத்திருந்தால் உடனடியாக எமக்கு அறியத்தரவும்.
  • உங்கள் மாதாந்த அறிக்கைகளை பாதுகாப்பான இடத்தில் வைக்கவும், அவற்றில் இரகசியத்தன்மை வாய்ந்த தகவல்கள் காணப்படுகின்றன.
  • நீங்கள் வெளிநாட்டு விஜயம் செய்யவுள்ளமை மற்றும் கடன் அட்டையை அந்நாட்டில் பயன்படுத்த திட்டமிட்டிருப்பின் அவை பற்றி கார்ட் சென்டருக்கு அறிவிக்கவும்.
  • உங்கள் முகவரி அல்லது தொடர்பு கொள்ளக்கூடிய இலக்கங்கள் ஆகியவற்றில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால் அவற்றை எங்களுக்கு அறியத்தாருங்கள். அதன் மூலமாக கால தாமதமின்றி உங்களுக்கு மாதாந்த அறிக்கைகள் மற்றும் SMS அலேர்ட்களை அனுப்பக்கூடியதாக இருக்கும்.
  • உங்கள் அட்டை காணாமல் போனால் அல்லது திருடப்பட்டிருந்தால் உடனடியாக எமக்கு அறிவிக்கவும்.
  • அட்டையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு சகல நடவடிக்கைகளையும் கார்ட் உரிமையாளர் மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், PIN இலக்கத்தின் இரகசியத்தன்மையையும் பேண வேண்டும்.
  • கொடுக்கல் வாங்கல்களை பாதுகாப்பான முறையில் நடைபெறுவதற்கு, கார்ட் உரிமையாளர் இலவச SMS அலேர்ட் சேவைக்கு தமது கையடக்க தொலைபேசி இலக்கத்தை பதிவு செய்து கொள்ளலாம்.
செய்யக்கூடாதவை
  • எந்தவொரு மூன்றாம் நபருக்கும் உங்கள் அட்டையின் PIN இலக்கம், CVV இலக்கம் மற்றும் காலாவதியாகும் திகதி ஆகியவற்றை வழங்க வேண்டாம்.
 
கார்ட் வகை விசேட உள்ளம்சங்கள் கடன் எல்லை யாருக்கு கட்டணங்கள்
BOC Visa பிளாட்டினம் கிரெடிட் கார்ட்            
  • பயண விபத்துக் காப்புறுதி காப்பீடு அமெ.டொ. 250,000* வரை
  • மருத்துவ காப்புறுதி காப்பீடு அமெ.டொ. 100,000* வரை
  • வரவேற்பு (கொன்சேர்ஜ்) சேவை (உதாரணம்: பயண உதவிகள், பயண முன் உதவிகள், வியாபார சேவைகள் உதவிகள்...)
*நிபந்தனைகளுக்கு உட்படும்
ரூ. 250,000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகை உயர் நிகர மதிப்பு மிக்க வாடிக்கையாளர்களுக்கு இணைவுக் கட்டணம் - ரூ. 1500 வருடாந்த கட்டணம்- ரூ.3000
BOC மாஸ்டர் டைடேனியம் கார்ட்
  • இலவச ஆயுள் காப்புறுதி அல்லது நிலையான அங்கவீன காப்பீடு
    • 100,000/=
ரூ. 50,000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகை உயர் நிகர மதிப்பு மிக்க வாடிக்கையாளர்களுக்கு இணைவுக் கட்டணம் - ரூ. 1500 வருடாந்த கட்டணம்- ரூ.3000
BOC VISA கோல்ட் கார்ட் BOC மாஸ்டர் கோல்ட் கார்ட்
  • இலவச ஆயுள் காப்புறுதி அல்லது நிலையான அங்கவீன காப்பீடு

    • 100,000/=
ரூ. 50,000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகை உயர் நிகர மதிப்பு மிக்க வாடிக்கையாளர்களுக்கு இணைவுக் கட்டணம் - ரூ. 1500 வருடாந்த கட்டணம்- ரூ.3000
BOC Visa கிளாசிக் கார்ட் BOC மாஸ்டர் ஸ்டான்டர்ட் கார்ட்
  • இலவச ஆயுள் காப்புறுதி அல்லது நிலையான அங்கவீன காப்பீடு

    • ரூ. 50,000/=
ரூ..25000- ரூ..50000 வழமையான வருமானம் பெறுவோருக்கு இணைவுக் கட்டணம் - ரூ. 1000 வருடாந்த கட்டணம்- ரூ.1000

பிணைப்பு (அஃபினிட்டி) அட்டைகள்

  • GMOA
  • பட்டயக் கணக்காளர்கள்
   
  • GMOA - பொது மருத்துவ அதிகாரிகள் சம்மேளனத்தின் அங்கத்தவர்களுக்கு
  • பட்டயக் கணக்காளர்கள் - பட்டயக் கணக்காளர்களுக்கு
  • இலவச ஆயுள் காப்புறுதி அல்லது நிலையான அங்கவீன காப்பீடு
  • 100,000/=
ரூ. 100,000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகை   இணைவுக் கட்டணம் - ரூ. 1500 வருடாந்த கட்டணம்- ரூ.2000

விசேட அட்டைகள்

  • BOC ஃபிளெக்ஸி கார்ட்

நீங்கள் செய்ய வேண்டியது

  • ஆகக்குறைந்தது ரூ. 100,000 நிலையான வைப்பை ஆகக்குறைந்தது 3 வருடங்களுக்கு பேணுவது

BOC ஃபிளெக்ஸி கார்டின் அனுகூலங்கள்

  • நிலையான வைப்புத் தொகை பெறுமதியில் 90 வீதம் வரை பயன்படுத்தலாம்.
  • 3 மணித்தியாலங்களுக்குள் அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.
  • கோரும்பட்சத்தில் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு மேலதிக அட்டை
  • குறைந்த வட்டி வீதம் (மாதமொன்றுக்கு 1 வீதம்)
  • பண மீளப்பெறுகைகளுக்கு எவ்வித கட்டணமும் அறவிடப்படாது
  • பெயரளவிலான இணைவு மற்றும் வருடாந்தக் கட்டணம்
  • BOC அங்கீகாரத்தைப் பெற்ற விற்பனை நிலையங்கள் மற்றும் நாடு முழுவதையும் சேர்ந்த BOC ATMகளில் பயன்படுத்தலாம்.
நிலையான வைப்புத் தொகையில் 90 வீதம்   இணைவுக் கட்டணம் - ரூ. 200 வருடாந்த கட்டணம்- ரூ.200  
 
7.1 இணைவுக் கட்டணம் மற்றும் வருடாந்தக் கட்டணம்

கார்ட்களின் வகைகள் இணைவுக் கட்டணம் (ரூ.) வருடாந்தக் கட்டணம் (ரூ.)
முதன்மை இணைந்த பிளாட்டினம் டைடேனியம்
பிளாட்டினம் 1500 1200 3000 1500
டைடேனியம் 1500 1200 2000 750
கோல்ட் 1500 1200 2000 750
கிளாசிக் 750 750 1000 500


7.2 ஏனைய கட்டணங்கள்

தற்காலிகமாக எல்லைப் பெறுமதி அதிகரித்தல் ரூ. 1000 வெளிநாட்டு கூரியர் கட்டணம் ரூ. 1500
நிலையான கடன் எல்லைப் பெறுமதி அதிகரிப்புக் கட்டணம் ரூ. 500 விற்பனை நிலைய படிவப் பிரதி கோரிக்கை கட்டணம் ரூ. 500
இடைநிறுத்தப்பட்டிருந்த அட்டையை மீள செயற்படுத்துவதற்கான கட்டணம் ரூ. 500 காசோலை திரும்பல் அறிவித்தல்கள் ரூ. 1000
தாமதித்த கொடுப்பனவு தண்டப்பணம் ரூ. 750 தூதரகங்களுக்கான உறுதிப்படுத்தல் கடிதங்கள் ரூ. 1000
எல்லைக்கு அப்பாற்பட்ட பாவனை கட்டணம் ரூ. 600 அறிக்கையின் பிரதி வழங்கல் கட்டணம் ரூ. 100
வட்டி வீதம் கட்டணம் செலுத்த வேண்டிய திகதியிலிருந்து மாதமொன்றுக்கு 2 வீதம் பண மீளப்பெறுகைகளுக்கான வட்டி வீதம், மீளப்பெற்ற திகதியிலிருந்து மாதமொன்றுக்கு 2 வீதம்
CRIB கோரிக்கை கட்டணங்கள் ரூ. 500 பண மீளப்பெறுகை கட்டணம் 3.5 வீதம் (ஆகக்குறைந்தது ரூ. 300)
தொலைந்த அட்டைக்கு பதில் புதிய அட்டை வழங்கல் கட்டணம் ரூ. 500 PIN இலக்கம் மீள வழங்கல் கட்டணம் ரூ. 250

 

  • அட்டை கிடைத்தவுடன் உரிமையாளரினால் உடனடியாக அதில் கையொப்பமிடப்படல் வேண்டும்.
  • அட்டை கிடைத்தவுடன் அதை செயற்படுத்திக் கொள்ள 0112204444 க்கு அழைப்பை மேற்கொள்ளவும்.
  • வங்கியின் தீர்மானத்தின் பிரகாரம் வட்டி வீதம் காலத்திற்குக் காலம் மாற்றமடையும்.
  • அட்டை வைத்திருப்பவர்கள் ATMகளிலிருந்து PIN இலக்கத்தை பயன்படுத்தி பண மீளப்பெறுகைகளை மேற்கொள்ளலாம்.
  • அமுலிலுள்ள சட்ட விதிமுறைகளின் பிரகாரம், கடன் பற்றிய விவரங்களை வங்கி, இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்துடனும் ஏனைய ஒழுங்குபடுத்தும் அமைப்புகளுடனும் பகிர்ந்து கொள்ளும்.
  • மாதாந்த அறிக்கை கிடைக்காவிடின், கார்ட் சென்டருக்கு அறிவிக்கவும்.
  • எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உங்கள் கடன் எல்லையை விட கணக்கு மீதி அதிகரிக்கும் பட்சத்தில் எல்லை கடந்த கட்டணம் அறவிடப்படும்.
  • கொடுக்கல் வாங்கல் பெறுமதியின் 1.5 வீதம் முத்திரை கட்டணமாக அறவிடப்படும்.

 

BOC கடன் ஒன்றை பெற்றுக் கொள்வதற்கு காணப்பட வேண்டிய ஆகக்குறைந்த தகைமை என்ன?

  • 18 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பதுடன், ஆகக்குறைந்த தேறிய வருமானமாக ரூ. 15000 மாதாந்தம் பெறுபவராக இருத்தல்.

BOC கடன் அட்டையை பெற்றுக் கொண்ட உடனே அதை என்னால் பயன்படுத்த முடியுமா?
அட்டையின் பின்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்தினூடாக எம்முடன் நீங்கள் தொடர்பை ஏற்படுத்தி அட்டையை செயற்படுத்திக் கொள்ள வேண்டும்.

கடன் அட்டைக்கு ஏன் நான் PIN இலக்கத்தை கொண்டிருக்க வேண்டும்?

  • ATMகளினூடான பணமீளப்பெறல்களுக்கு
  • வெளிநாடுகளில் கடன் அட்டை பயன்படுத்தப்படும் போது, சில நாடுகளில் கடன் அட்டை கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு PIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

என்னால் PIN இலக்கத்தை மாற்றிக் கொள்ள முடியுமா?

  • எந்தவொரு BOC ATMஇலிருந்தும் உங்கள் PIN இலக்கத்தை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். அவ்வாறு மாற்றிக் கொள்ள நாம் எப்போதும் அறிவுறுத்துகிறோம்.

BOC கடன் அட்டை காலாவதியாவதற்கு முன்னதாக எனக்கு புதிய அட்டை சுயமாகவே கிடைக்குமா?

  • உங்கள் அட்டை காலாவதியாவதற்கு 30 நாட்களுக்குள் புதிய கடன் அட்டை உங்களுக்கு கிடைக்கும்.

எனது BOC கடன் அட்டையை நான் எங்கு பயன்படுத்தலாம்?

  • Visa/Master Card/Amex ஆகிய எந்தவொரு கொடுப்பனவையும் ஏற்றுக் கொள்ளும் எந்தவொரு விற்பனை நிலைய பகுதியிலும் (POS) பயன்படுத்தலாம்.
  • ஒன்லைன் கொள்வனவுகளுக்கு
  • பண மீளப்பெறுகைகளுக்கு ATM இயந்திரங்களில் (உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும்)

ஏனைய வங்கிகளுக்கு சொந்தமான POS இயந்திரங்களில் எனது BOC கடன் அட்டையை என்னால் பயன்படுத்த முடியுமா?
CVV இலக்கம் என்றால் என்ன? அதன் பயன்பாடு என்ன?

  • CVV என்பது 3 இலக்கங்களை கொண்டது, இது கடன் அட்டையின் பின்பகுதியில் பதியப்பட்டிருக்கும்.
  • ஒன்லைனில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் போது CVV பயன்படும்.

எனது கடன் அட்டை கணக்கு மீதியை எவ்வாறு நான் பரிசோதித்துக் கொள்வது?

  • இணைய வங்கிச் சேவையை (e-banking) இலங்கை வங்கியிடமிருந்து பெற்றுக் கொண்டு, கடன் அட்டை கணக்கு மீதியை ஒன்லைனில் பார்வையிடலாம். எந்தவொரு ATM ஊடாகவும் இந்த சேவையை பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், கடன் அட்டையின் பிற்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்தி இந்த சேவையை பெற்றுக் கொள்ளலாம்.

எனது கடன் எல்லையை எவ்வாறு என்னால் அதிகரித்துக் கொள்ள அல்லது குறைத்துக் கொள்ள முடியும்?

  • கடன் அட்டை வழங்கும் பகுதிக்கு உங்கள் பிந்திய வருமானத்தை உறுதிசெய்யும் ஆவணங்களுடன் இணைத்து உங்கள் கோரிக்கையை சமர்ப்பிக்கவும்.

எனது கடன் அட்டை கணக்கை எவ்வாறு நான் இரத்துச் செய்வது?

  • எமது ஏதாவதொரு கிளையில் கோரிக்கை கடிதமொன்றை சமர்ப்பிக்கவும் அல்லது அந்த கோரிக்கையுடன் அட்டையை செல்லுபடியற்றதாக்கும் வகையில் துளையிட்டு அல்லது இரு பிரிவுகளாக உடைத்து இணைத்து தபால் மூலம் அனுப்பவும்.

எனது பிரத்தியேக விவரங்களை எவ்வாறு நான் மாற்றிக் கொள்வது?

  • மாற்றங்கள் பற்றிய விவரங்களை உள்ளடக்கிய கையொப்பமிடப்பட்ட கடிதத்தை சமர்ப்பிக்கவும்.

எனது BOC கடன் அட்டை மாதாந்த அறிக்கைகளை நான் எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம்?

  • மாதாந்த அறிக்கைகள் தபால் மூலமாக அல்லது மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படும்.

SMS அலேர்ட்களின் அனுகூலம் என்ன?

  • ஒவ்வொரு கொடுக்கல் வாங்கல் பற்றிய விவரங்களையும் குறுந்தகவல் மூலம் பெற்றுக் கொள்வதற்காக உங்கள் கையடக்க தொலைபேசி இலக்கத்தை எம்மிடம் வழங்கலாம். இதன் மூலம் கடன்அட்டைக் கொடுக்கல் வாங்கல்களின் உண்மைத் தன்மையை நீங்கள் இதன் மூலம் உறுதி செய்து கொள்ளலாம்.

எனது கடன் அட்டை தொலைந்து போனால் அல்லது திருடப்பட்டால் நான் என்ன செய்ய வேண்டும்?

  • இந்த விடயம் தொடர்பில் நீங்கள் உடனடியாக கார்ட் சென்டருக்கு அல்லது அழைப்பு நிலையத்துக்கு அறிவிக்க வேண்டும்.
  • உங்கள் கடன் அட்டை இலக்கங்கள் மற்றும் தொலைபேசி இலக்கங்களை பாதுகாப்பான இடத்தில் பதிந்து வைத்திருக்கவும். அட்டை தொலைந்தால் அல்லது திருடப்பட்டால் அவை தொடர்பில் அறிவிக்க இது உதவியாக அமையும்.

எனது கடன் அட்டையில் மோசடியான செயற்பாடு இடம்பெறுகிறது என சந்தேகிக்கும் பட்சத்தில் நான் என்ன செய்ய வேண்டும்?

  • உடனடியாக அட்டையின் பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ள அழைப்பு நிலைய இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்தி குறித்த சந்தேகத்திற்கிடமான கொடுக்கல் வாங்கல் பற்றி அறியத்தரவும்.

எனது கடன் அட்டை கொடுப்பனவை மேற்கொள்ள நிலையியல் கட்டளை ஒன்றை எவ்வாறு நான் மேற்கொள்ளலாம்?

  • எமது எந்தவொரு கிளைக்கும் நீங்கள் விஜயம் செய்து கணக்கொன்றை ஆரம்பிக்கலாம் (BOC இல் கணக்கு வைத்திருக்காதவர் ஆயின்). அதன் பின்னர், நிலையியல் கட்டளை கோரிக்கையை நீங்கள் சமர்ப்பித்து நிலையியல் கட்டளை வசதியை பெற்றுக் கொள்ளலாம்.

எனது BOC கடன் அட்டை சேதமடைந்திருந்தால் நான் என்ன செய்ய வேண்டும்?

  • கடன் அட்டையின் பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ள இலக்கத்தினூடாக எமது அழைப்பு நிலையத்துக்கு அல்லது வழங்கல் பிரிவுக்கு அறிவிப்பதுடன் புதிய மாற்றீட்டு அட்டைக்கான கோரிக்கையையும் சமர்ப்பிக்கவும்.

வெளிநாடுகளிலும் எனது BOC கடன் அட்டையை நான் பயன்படுத்தலாமா?

  • ஆம், Visa மற்றும் MasterCard கொடுப்பனவுகளை ஏற்றுக் கொள்ளும் எந்தவொரு விற்பனை நிலையத்திலும் உங்கள் BOC கடன் அட்டையை நீங்கள் பயன்படுத்தலாம்.

எனது BOC கடன் அட்டையை ATM இலிருந்து பணத்தை மீளப்பெற்றுக் கொள்வதற்கு என்னால் பயன்படுத்த முடியுமா?

  • ஆம், உங்கள் BOC கடன் அட்டையை Visa மற்றும் MasterCard ஏற்றுக் கொள்ளும் எந்தவொரு ATM இலும் பணத்தை மீளப் பெறுவதற்கு நீங்கள் பயன்படுத்தலாம்.

எவரேனும் எனது கடவுச் சொல்லை திருடி அல்லது பயன்படுத்தி மோசடியான கொள்வனவொன்றை மேற்கொண்டுள்ளார் என நான் சந்தேகித்தால் என்ன செய்ய வேண்டும்?

  • உங்கள் கடன் அட்டையின் பின்பகுதியில் வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பை ஏற்படுத்தி உடனடியாக எமது அழைப்பு நிலையத்துக்கு நீங்கள் அறிவித்து உங்கள் கடவுச் சொல்லை மாற்றிக் கொள்ள வேண்டும்.

மேலதிக விவரங்களுக்கு தொடர்புகளுக்கு,

 

  • 24 மணிநேர வாடிக்கையாளர் சேவை இலக்கம் – 011 2204444
  • அட்டை வழங்கல் – 011 2205636/011 2205637
  • மீதி கோரல் / அட்டை செயற்படுத்தல் – 011 2204444
  • PIN விசாரணைகள் – 011 2205644
  • கட்டணப்பட்டியல் விசாரணை – 011 2204760 – 62
  • தொலைந்த அட்டை செயற்படுத்தல் – 011 2205641
  • முகவரி/மொபைல் இல. மாற்றம் – 011 2205641
  • அட்டை புதுப்பிப்பு – 011 2205639 / 011 2205634
  • கடன் எல்லை அதிகரிப்பு – 011 2205638

 

Disputes/Complaints/Grievances on Card Payments

 

தரவிறக்கங்கள்