Bank of Ceylon
Responsive image

   14+ பதின்ம வயதினர் சேமிப்புக் கணக்கு

14 ப்ளஸ் என்பது பதின்ம வயதுப் பருவத்தைச் சேர்ந்தவர்களுக்கான விசேடமாக வடிவமைக்கப்பட்ட கணக்காகும். பணமீளப்பெறல்கள் உள்ளடங்கலாக வங்கிக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட பதின்ம வயதுப் பருவத்தினரை தயார்ப்படுத்தும் வகையில் இந்த கணக்கு அமைந்துள்ளது. நாடு முழுவதும் காணப்படும் எந்தவொரு இலங்கை வங்கிக் கிளையிலிருந்தும் 14 ப்ளஸ் கணக்கை 14 முதல் 18 வயதைச் சேர்ந்த பதின்ம வயதுப் பருவத்தைச் சேர்ந்தவர் தமது பெற்றோரின் அனுமதியுடன் ஆரம்பித்துக் கொள்ள முடியும்.

உள்ளம்சங்கள் / அனுகூலங்கள்

உயர்ந்த வட்டி –

உயர்ந்த வட்டி வீதம் (சாதாரண சேமிப்புக் கணக்குகளுக்கு வழங்கப்படுவதை விட 0.5% மேலதிகமாக வழங்கப்படும்)

ATM மற்றும் டெபிட் அட்டை வசதி

விசேட ATM மற்றும் டெபிட் அட்டை மூலமாக நாடு முழுவதும் காணப்படும் ATM இயந்திரங்களின் மூலமாக எவ்வேளையிலும் பணத்தை மீளப்பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் சொப்பிங் கார்டாகவும் பயன்படுத்தலாம்.

இணைய வங்கிச் சேவை

இணைய வங்கிச் சேவை ஊடாக உங்கள் கணக்கு மீதியை நீங்கள் பரிசோதிப்பதுடன் இணையத்தினூடாக ஏனைய கொடுக்கல் வாங்கல்களையும் மேற்கொள்ளலாம்.

குழந்தைக்கு 18 வயது பூர்த்தியடைந்ததும் என்ன நடக்கும்

18 வயதை அடைந்ததும், கணக்குகள் சுயமாக 18+ பிரிவுக்கு மாற்றம் செய்யப்படும்.

கணக்கை ஆரம்பிப்பதற்கு அவசியமான ஆவணங்கள்

பிள்ளையின் பிறப்புச் சான்றிதழ் பிரதி

முகவரியை உறுதி செய்யும் ஆவணம் (பெற்றோரின் தேசிய அடையாள அட்டை முகவரியில் இருந்து வேறுபட்டால்)

கணக்கை ஆரம்பிப்பதற்கு பெற்றோரின் சம்மதம் - (கணக்கு ஆரம்பிக்கும் விண்ணப்பப் படிவத்தில் பெற்றோர் கையொப்பமிட வேண்டும்))

 

(கணக்குக்கு வழங்கப்படும் வசதிகள் தொடர்பான எந்தவொரு நிபந்தனையிலும் மாற்றங்கள், சேர்க்கைகள் அல்லது மீளமைப்புகள் மேற்கொள்வதற்கான அதிகாரத்தை இலங்கை வங்கி தன்னகத்தே கொண்டுள்ளது)

மேலதிக விவரங்களுக்கு அருகிலுள்ள இலங்கை வங்கி கிளையின் முகாமையாளரை தொடர்பு கொள்ளவும் அல்லது எமது அழைப்பு நிலைய தொலைபேசி இலக்கமான 0112 204444 உடன் தொடர்பு கொள்ளவும்.