Bank of Ceylon

ரண் சுரக்கும் கடன் சேவை

உங்கள் நகைகளுக்கு எதிராக சில நிமிடங்களில் கடன் ஒன்றை பெற்றுக் கொள்ளக்கூடிய 'ரண் சுரக்கும் அடகு கடன் சேவை' வசதியை இலங்கை வங்கி வழங்குகிறது.

எந்தவொரு பிரத்தியேக தேவைக்கும் மிகவும் பொருத்தமானதாக இந்த தீர்வு அமைந்துள்ளது. பயன்படுத்தாமல் காணப்படும் உங்கள் தங்க நகைகளை வைத்து, கடன் வசதியை பெற்றுக் கொள்ள முடியும்.

நீங்கள் கடன் / மேலதிகப்பற்று வசதிகளை தங்க நகைகளுக்கு எதிராக பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த வசதியின் உள்ளம்சங்கள்

  • அரச வங்கியின் 100 வீத பாதுகாப்பு.
  • சிக்கல் இல்லாத துரித நடைமுறையில் கடன் வழங்கல்.
  • எளிமையான ஆவணப்படுத்தல்கள்.
  • தெரிவு செய்யப்பட்ட கிளைகளில் நீடிக்கப்பட்ட சேவை நேரங்கள்.
  • வழங்கப்படும் முற்கொடுப்பனவு தொகை என்பது தங்க நாணயங்களின் கெரட் பெறுமதியைப் பொறுத்து அமைந்திருக்கும்.
  • முதிர்ச்சிக் காலப்பகுதியினுள் இலகுவான தவணை கொடுப்பனவு வசதிகள்.
  • வரையறைகளற்ற புதுப்பித்தல் தெரிவுகள்.
  • சந்தையில் காணப்படும் அதிகுறைந்த வட்டி வீதங்கள்
  • கவர்ச்சிகரமான முற்பண வீதங்கள்
  • கையாளல் கட்டணங்கள் இல்லை.
     

நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்படும் *

தற்போதைய வட்டி வீதங்கள் மற்றும் நியதிகள் மற்றும் நிபந்தனைகள் பற்றி அறிந்து கொள்ள அருகிலுள்ள கிளையை நாடவும்

அருகிலுள்ள இலங்கை வங்கிக் கிளைக்கு விஜயம் செய்து, உங்கள் பிரத்தியேக தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு எமது அதிகாரிகள் வழங்கும் ஒப்பற்ற சேவையை அனுபவியுங்கள்.