Bank of Ceylon

மேலதிக பற்றுகள்
 

இலங்கை வங்கியினால் வழங்கப்படும் மேலதிகப் பற்று வசதி போட்டிகரமான கட்டணத்தில் அமைந்துள்ளதுடன் துரித கதியில் வழங்கப்படுகிறது. உங்கள் காசுப் பாய்ச்சலை கையாள்வதற்கு சிறந்த முறையாக மேலதிகப்பற்று அமைந்துள்ளது. உங்கள் நடைமுறைக் கணக்குடன் இது இணைக்கப்பட்டுள்ளதுடன், உங்கள் தேவைக்கேற்ப உங்கள் கடன் எல்லை வரை நீங்கள் பயன்படுத்த முடியும். இணைய வங்கிச் சேவை மூலமாக உங்கள் எல்லைப் பெறுமதியை அதிகரிக்க அல்லது குறைக்குமாறு நீங்கள் கோர முடியும்.


அனுகூலங்கள்

  • மேலதிகப்பற்று என்பது துரிதமானதும் ஏற்பாடு செய்துகொள்ள இலகுவானதுமாகும்.
  • தேவையான சந்தர்ப்பத்தில் உங்களுக்கு பணம் கிடைக்கும்.
  • நீங்கள் பயன்படுத்தும் தொகை மீது மட்டும் வட்டி செலுத்துவீர்கள், உங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட எல்லைத் தொகை மீதும் வட்டி செலுத்த வேண்டியதில்லை.
  • தனிஉரிமையாளர்களும் மேலதிகப்பற்றுக்கு அல்லது தமது எல்லைகளை அதிகரித்துக் கொள்வதற்கு விண்ணப்பிக்கலாம்.